பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அறிஞர் அண்ணா நினைவஞ்சலிஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற அந்தக் கிராம மக்களைப்போல - அரசியலில் கூத்தடித்துக் கொண்டிருப்பவர்கள், அறிஞர் அண்ணாவால் தெளிவு பெற்றார்கள்.

உலகத்திலுள்ள 96 மூலப் பொருள்களைப்போல், தத்துவத்திலுள்ள 95 அம்சங்களும், அண்ணாவால் பொலிவு பெற்றன.

அந்த வான் பறவை, என்று குன்றேறி நின்று குரல் கொடுத்ததோ - அன்றே அறிஞர் அண்ணாவைப் பற்றி அகிலம் அறிய ஆரம்பித்தது! -

என்னைப்போல், இனப் துன்பங்களைக் கவனியாமல், அண்ணாவை நெருங்கிப் பார்த்தாலொழிய, இந்தப் பேருண்மைகளைக் காணமுடியாது!

காணாதவர்கள், அந்த கிராம மக்களைப்போல் அறிவிருந்தும் அறியாதார், கண்டவர்கள், அப்பேருண்மையை மற்றவர்கட்கு விண்டிடும் ஆற்றலுடையவர்கள்!

குறிப்பு : விஞ்ஞான உலகத்தில் ஒரு பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு, இப்பொழுது ஒரு பேருண்மையைக் கண்டுபிடித் திருக்கிறார்கள்.

உலகம் தோன்றியது முதல், இதுவரையில், ஒரு விண்மீனின் ஒளி, நிலத்தை நோக்கி இன்னும் வரவில்லை.

ஒரு நொடிக்கு ஒரு லட்சத்து 36 ஆயிரம் மைல் வேகத்தில், அதன் ஒளியலைகள் பாய்ந்து வந்தாலும் - அக்குறிப்பிட்ட விண்மீனின் ஒளி, இன்னும் நிலத்தை அடையவில்லை.

அது மட்டும் நிலத்தை வந்தடைந்தால், மனிதனின் உயிரணுக்கள் சாகா என்றும், அதனால் மரணம் தவிர்க்கப்படும் என்றும், அந்த விஞ்ஞானிகள் ஒர் அறிக்கையில் கூறியிருக்கின்றனர். இந்த விஞ்ஞானப் பேருண்மையில் உருவானதே பேரறிஞர் அண்ணாவுக்கு பொருந்திய 'நினைவஞ்சலி'யாகும்.