பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அறிஞர் அண்ணா நினைவஞ்சலிசிறுபான்மைக் கட்சிகள்; எதிர்க்கட்சிகளாக இயங்கிச் சித்ரவதைக்கும் ஆளாகின்றன. இவை ஜனநாயகத்தின் பெயரால் நடக்கின்றன.

இயற்கையின் ஜனநாயகத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட கடல், உலகத்தை அடக்கி, ஆண்டு, ஆட்சிபுரியவில்லை.

எதிர்க்கட்சியைப் போலுள்ள பூமிதான், மக்களை ஆட்சி புரிகிறது. வளமாக வாழ வைக்கிறது.

சிறுபான்மைக்கு சிறப்பான தகுதியை வழங்கியதோடு - பெரும்பான்மை நின்றுவிடவில்லை.

'பூமியே!, நீ கொடுங்ககோலை ஏந்தினால், புரண்டுவரும் கடலலைக் கோள்களால், உன்னைப் புதைகுழிக்கு அனுப்புவேன், ஜாக்கிரதை'

கடல், தனது அலையோசையெனும் அபாய முழக்கங்களால், தலைவர்களைப் போல, அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது.

இன்றைய ஜனநாயகமானாலும் - இயற்கையின் தத்துவ முறையானாலும் - இரண்டிலும், ஜனநாயக உள்ளம் தவழ்வதைப் பார்க்கின்றோம்.

அறிஞர் அண்ணாவின் உள்ளமும் - கடல் போன்றது!

இன்றைய ஜனநாயகத் தத்துவத்தை, அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஜனநாயகத் தத்துவத்திற்கும் ஆபத்தை உண்டாக்குவோர், அவர்கள் - எவரானாலும் சரி, தனது கடல்கோள் போன்ற எதிர்ப்பால், அவர் அந்த அபாயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்றவராவார்.

பெரும்பகுதி தண்ணீரை வைத்திருக்கும் கடல் நீரில், அறிஞர் அண்ணாவின் சீதளத் திரன் செறிந்த அறிவில், இயற்கையாகவே வெதவெப்பு இருக்கிறது.