பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி.கலைமணி

111சில அரசியல் தலைவர்கள், பிரச்சினைகளைத் தேனைப் போல ஆக்கி, எறும்பைப் போலுள்ள சாதாரண மனிதர்களிடம் கூடத் தெரிவித்து விடுகிறார்கள்.

அறிஞர் அண்ணா போன்றவர்கள்தான், சிப்பியை போல அந்தப் பிரச்னையை, அமைதியான இடத்தில் வைத்து - சிந்தித்து - அதே பிரச்னையைப் போல, திட்டத்தையும் தீட்டுகிறார்கள்.

வான், நீர்த்துளியாக இருந்தால், சிப்பியில் ஒரு முத்து தான் இருக்கும். அதாவது, தெளிவானப் பிரச்னைகளுக்கே, முத்தான திட்டங்களாகும்.

வயிற்றெரிச்சல் காரணமாகப் பிரச்னைகளைச் சிதறுகின்ற தன்மையில் பேசுகின்றவர்களுக்கு, அறிஞர் அண்ணாவின் சிப்பித் தன்மை அமைவதில்லை.

அவரை நோக்கி வருகின்ற பிரச்னைகளை அவர் தள்ளி விடுவதுமில்லை.

பக்கத்திலிருந்த சிப்பி, ஏற்கனவே அடிவயிற்றில் சுமந்திருந்த நீரை முத்தாக்கி, உலகுக்குப் பரிசளிக்கத் தன் கொடை உள்ளத்தைத் திறந்து கொண்டிருந்தது.

அப்பொழுது பொற்றுகளை - மணிக் குலத்தைக் கடல் முத்தைப், போயெடுக்க அடக்கிய மூச்செவரின் மூச்சு?, என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாட்டைப் பாடிக் கொண்டே, இருவர் கீழே இறங்கி வந்தார்கள்.

முத்துக் குளிக்கும் அந்தத் தென்பாண்டி வீரர்கள் - சிப்பியை வரவேற்றனர். 'சென்று வருகிறேன் தோழா’ என்று கூறி, அவனின் உழைப்பால் பொலிவான, ஆண்டாண்டுக்காலம் தமிழ் மன்னன் தடந்தோளில் சிப்பி சென்று - சிரித்தபடியே குந்தியது.

என்னுடைய எண்ணங்கள்; அறிஞர் அண்ணாவை - முத்து ஈனும் சிப்பியாக - முத்துக் குளிப்போர் கையில் தவழும் - சிப்பியாக எண்ணின.