பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

83அந்த மலையின் அருகே, "அக்டோபஸ்", போன்ற கடல் மிருகங்களும் - திமிங்கலம் - சுறா போன்ற கடல் வாழ் பிராணிகளும், சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன.

கடல் குதிரை போன்ற மிருகங்கள், அம்மலையின் மீது ஏறுவதும் - இறங்குவதுமாக இருக்கின்றன. அப்போது, நீர் மட்டத்தில் போய்க்கொண்டிருந்த கடல் கொள்ளைக்காரனுடைய கப்பல், அந்த மலை மீது மோதிச் சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தது.

நடுக்கடலில் இதுபோன்ற ஒரு பயங்கர நிகழ்ச்சி நடந்திருந்தாலும் - ஒன்றும் நடக்காதது போலவே, கடல் அமைதி யோடும் - அடக்கத்தோடும் ஆடிக் கொண்டிருந்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் பனிமலையைப் போன்றவர். அவர், ஆழமான கடலில், ஒரு கண்டாமணியைப் போல இருந்தார்.

ஆனால், ஊர் உடைமைகளைப் பொதுமக்களுக்கு விரோதமான சக்தியும் - கொடுங்கோலும் அபகரித்துக் கொண்டு வரும் அந்தக் கப்பல் கட்சிகளை; தனது புயல் வேகச் சக்தியால் மோதி, அவர் பொடி பொடியாக்கி வந்தார்.

இதிலிருந்து நான் பெற்ற பாடம் என்னவென்றால் - நிலம் தோன்றுவதற்கு முன்னாலேயே இருக்குமானால், அதை எதிர்க்கும் ஒரு பொய்ச் சக்தியும் இருக்குமானால், இவைகளின் போராட்டத்தை, நீதி எப்படி நியாயக் கண்கொண்டு பார்க்கிறதோ.

அதனைப்போல, பொதுமக்களது வாழ்க்கைக் கடலின் மத்தியில் - அவ்வாழ்க்கையின் மீதே ஊர்ந்து வருகின்ற கயவர்களை - உறுதியாக உடைத்தெறியும் ஆற்றல் பெற்றவர் அண்ணா அவர்கள் என்பதேயாகும்.

அறிஞர் அண்ணா அவர்களின் ஆழமான உள்ளத்தில், நீதியை - நேர்மையை - இழந்தவர்களைத் தட்டிக் கேட்கும் ஒரு நியாய புத்தியைப் பனிமலையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது.