பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#0

மெத்த மகிழ்ச்சி :

தொடர்ந்து எழுதுங்கள். ஆனால், பேரறிஞர் அண்ணாவைப் பற்றி எழுதியதோடு நிற்க வேண்டாம். இதே நினைவஞ்சலி முறையிலேயே, சர்வதேச தலைவர்களும் பிரமுகர்களுமான சர்ச்சில், ஸ்டாலின், மகாத்மா காந்தி, நேரு, இந்திரா, திலகர், 'ராஜாஜி போன்றவர்களோடு, நாவலர், கருணாநிதி ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு சிறுசிறு உரைநடைச் சித்திரங்களாக எழுதி, அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடுங்கள்.

தமிழ்நாட்டு இலக்கிய உலகில் தங்களுக்குக்கென்று ஒரு தனி இடம் நிச்சயம் கிடைக்கும். எல்லாத் தரப்பிலிருந்தும் கிடைக்கும்.

நல்லது. மற்றவை நேரில், எப்போதாவது - சந்திக்கும்போது

அன்புடன் 25.4.1971 வி. கோவிந்தன்

(ஒப்பம்)

குறிப்பு :

'தினமணி கதிர் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி, காலஞ்சென்ற திரு. விந்தன் அவர்கள், அறிஞர் அண்ணா நினைவஞ்சலி கையெழுத்துப் பிரதியைப் படித்தார். அவர் மனம் திறந்து பாராட்டிச் சூட்டிய அணிந்துரை இது.