பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.7. நீஅண்ணலே! பேரறிஞர் பெருந்தகையே! தென்னாட்டுக் காந்தி நீ!

அன்பு நீ! அறிவு நீ! பண்பு நீ! பைந்தமிழின் சீரிளமைத் திறம் நீ!

பருகா அமுதம் நீ! பாலின் நெய் நீ! பழத்தின் ரசம் நீ! பாட்டின் பண் நீ!

பரிதி நீ! கொள்ளும் கிழமை நீ!

உவமை ஒன்றுக்குள் அடங்கா உருவம் நீ!

உள்நின்ற நாவிற்குள் உரையாடி, நீ! பாகன் நீ!

கருவாய் உலகுக்கு முன்தோன்றி, கண்ணறிவு ஒளிகாண கருவும் நீ!

திருவே! என் செல்வமே! என் புகழே, நீ!

செழுஞ்சுடரே செழுஞ்சுடரின் சோதியே நீ!

உருவே! என் உறவே! ஊனே! ஊனின் உள்ளமே!

உள்ளத்தின் உள்ளே உரைகின்ற உயிரணுவே! என் அறிவே! கண்ணே!

கண்ணின் கருமணியே! மணியாடு பாவாய், நீயே!