பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#28 அறிஞர் அண்ணா நினைவஞ்சலி

கூட்டுவதைக் கூட்டிப் பெருக்குவதைப் பெருக்கினர்கள்!

சரித்திரமாய் இருந்து; சமாதானத்தை நிலை நாட்டி, பொற் காலத்தை உருவாக்கியவருக்குப் பெயர் அறிஞர் அண்ணா!

விஞ்ஞானமாய் விளங்கி, புதியன கண்டுபிடித்து ஈந்து, எமைப் புதியதோர் குடிமக்களாகிய வித்தகர் அண்ணா!

மனோதத்துவமாய் திகழ்ந்து, எமது மனக்குறைகளை மன்னிக்கும் மாமேதையின் நாமம் அண்ணா!

தத்துவமாய் எமை உருவாக்கி, மோன நிலையிலே ஆழ்த்தும் அறிஞர்க்கறிஞரது பெயர் அண்ணா!

அண்ணலே! தென்னகத்து மன்னவனே! தங்கள் பெருமையை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன:

அதனால், நாங்கள் தங்களுடன் ஐக்கியமாகிவிட்டோம்.

தமிழ் மாலை சூட்டித் தங்களைக் கண்டோம் பூரித்தோம்! பெருமையுற்றோம்.

'அறுபத்தேழு பற்றி நீங்கள் ஆற்றிய கருத்துகளை அகத்திலே இருத்திக் கொண்டோம்!

'கருமமே கண்ணாகி, கொள்கைப் பகையை அரியணை யிலேயிருந்து இறக்குவதே எமது பணியென்று ஆற்றினோம்! அதைத் தங்கள் காலடிக்குக் காணிக்கையாக்கிக் களித்தோம்!

இந்த சபதத்தை எம் இமை லும் மறவோம்! மறவோம்!

மூடினு: ற்

offs అః అణ