இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் பெருந்தகை
அண்ணாவால்
ஆதரிக்கப் பெற்றவன்.
என்
படவுலகப்
பிரவேசத்தின் போது -
'நல்லவன் வாழ்வா' னுக்காக
நான் எழுதிய பாட்டை -
படித்துப்
பரவசப் பட்டு.
'உன்னுள்
ஒரு பொறியிருக்கிறது...'
என்று -
உளமாரச் சொல்லி
உள்ளிருந்த பொறியை
ஊதிக் கனல் வளர்த்த -
உ
ய
ர்
த
மனித கோபுரம் - அந்த
மாமேதை!
அந்த
கோபுரத்திற்குக்
கும்பாபிஷேகம்
நடத்தியிருக்கிறார்
நண்பர் கலைமணி!
இந்த நூலை...
ஆசை ஆசையாக
வாசித் தேன்;