பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14. எல்லாம் நீயே!

வண்டாடும் தமிழ்ப் பூவே! கண்டாடும் சங்ககாலத் தமிழ்ப்பாவே! தொண்டுக்குத் தொகை விளக்கம் தந்தவனே! கண்டுக்கும் பாகுக்கும், நிகர் நின்றவனே! நயமான நாவுடையோய்! வயப்படுத்தும் வார்த்தைக்

கூட்டே செயலின் சின்னமே!

வான் வளர்த்தப் பெரும் புகழே! தேன் வளர்க்கும் தமிழ்த் தாதுக் கூடே! சுவைக்கும் சுவையாய் நின்ற தீஞ்சுவையே! ஒப்பற்ற ஒருவனுக்கு இருக்கும் துப்புற்ற முகமே! கார் பார்த்து ஆடுகின்ற கன்னித் தமிழ் மயிலே! சீர் பார்த்து அடுக்கி வைத்த செம்மாந்த வெண்பாவே! போர் பார்த்த முகமே! யார் பார்த்தும் கோணாத அகமே! தமிழ்ப் பதியே!

ஆனந்தத் திதியே!

தமிழர்க்கு கதியே!