பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

விளக்குகிறார் - "குதிரை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால், ஒருவர், 'பியூசிபாலசு' காலம் முதற்கொண்டே குதிரைகள் சிறப்படைந்தன" என்று எழுதுவார். அவர், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க வீரன் ஏறிவந்த குதிரையின் பெயரைத் தெரிந்து கொண்டவர் - மேனாட்டு வரலாற்று நிகழ்ச்சிகளில் அறிவு படைத்தவராக இருப்பார். நீலவேணியை நினைவுக்குக் கொண்டு வருவார் இராசா தேசிங்கு கதை தெரிந்த எழுத்தாளர். 'மாணிக்க வாசகரின் மந்திரி பதவி போகவும், இடர் மிகவும், இறைவன் அருள் வந்து சேரவும் குதிரைகளே காரணம்!... மணிவாசகத்தை நாம் பெறக் குதிரைகளன்றோ காரணம். குதிரையே உன்னைக் கும்பிடுகின்றேன்' என்று முடிப்பார் ஓர் எழுத்தாளர்.

"தாலி அறுக்கும் பிசாசே! தந்தைக்கும் தனயனுக்கும் பகை மூட்டும் சனியனே சூது சூழ்ச்சியிலே மக்களைச் சிக்க வைக்கும் கருவியே! உன்னால் கெட்டன குடும்பங்கள் குதிரையே! கோரத்தின் சொரூபமே! மாயத்தின் கருவியே! பாதகத்தின் பங்காளியே! உன் குலம் அழிக! கூண்டோடு அழிக! பூண்டின்றி அழிக! என்று எழுதுவார் ஒருவர் - கிண்டி குதிரைப் பந்தயத்தில் நேர்ந்த கொதிப்பினால், கோபத்தினால்" - இப்படிச் சுட்டிக் காட்டுகிறார் அண்ணா!

ஒரு பொருளைப் பற்றி வெவ்வேறு மன நிலையிலிருப்பவர்கள் எழுதினால், எண்ண ஓட்டங்கள் இவ்வாறு மாறுபட்டு வருவது இயல்பு:

புலவர் கலைமணி அவர்களோ, அண்ணாவைப் பற்றி ஒரே மன ஒட்டத்தில் - அண்ணாவின் உள்ளத்தையே பெற்று இந்நூலைப் படைத்திருப்பதால், இந்நூலே அண்ணா - அண்ணாவே இந்நூல் என அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாது.

இதை கலைமணியே குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம்! 'அண்ணாவை' உடன்பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் - அண்ணன் என்றனர்! கல்விப் பசி கொண்ட ஏழைகள் - அறிஞர் என்று கழறினர்! கவிஞர்கள் - அவரைக் கவிதைக்கு மூலம் என்றனர்! அத்தகைய அண்ண்னை - நான் என்ன என்று