இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
31
கேட்கப் பரவிவரும் இசை!
நோக்க எழிலீயும் காட்சி!
உணரச் சுகம் தரும் தென்றல்!
என ஐம்புலனையும் ஆட்கொள்பவர் அண்ணாவே என்றும், புகழ் மாலையைச் சூட்டி நண்பர் என்.வி. கலைமணி போற்றிப் பரவுகின்ற அறிஞர் அண்ணா நினைவு அஞ்சலியே இந்நூல்!
அவருடைய அஞ்சலி என்ன? அவரே சொல்கிறார். "கொம்புத் தேனும் செழும்பாகும் குலவும் பசும்பாலும் கூட்டி உண்டார்போல் இனிக்கும் குணம் கொண்டவனே!
உன்னில் என்னைச் சேர்ப்பாய்!
எனது நினைவஞ்சலியை நின் மலரடியில் வைக்கின்றேன்!"
புலவர் கலைமணியின் 'அஞ்சலி' பொருள் நிறைந்ததாய் இருக்கிறது; தமிழ் மணப்பதாய் பொலிகிறது; அண்ணாவின் புன்னகையாய் மிளிர்கிறது!
புலவர் கலைமணியின் எழுத்துப் பணி ஓங்குக! சிறக்க! என உள நிறைவோடு வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
சு. செல்லப்பன்
சென்னை,
1.3.98