பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38

பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா? அரசியலா? அவரது அழகான தமிழா? அற்புதமான ஆங்கிலமா?

எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில், நமக்கு இப்படி ஞாபகம் வருகிற தென்றல் - இதற்குப் பெயர்தான் என்ன?

சர்வ வல்லமையா!?

இவை சில துளிகள், ஆம், அத்தனையும் அமுதம், இப்படி: அண்ணாவை அணு அணுவாய் ஆய்ந்து எழுதிய ஆசிரியர்; அதற்கான தனக்குள்ள தகுதி பற்றியும் உரைக்கிறார்; இப்படி!

'என்னைப் போல், இன்பத் துன்பங்களைக் கவனியாமல், அண்ணாவை நெருங்கிப் பார்த்தாலொழிய, இந்தப் பேருண்மைகளைக் காண முடியாது’ என்கிறார். தன் தலைவனிடம், தனக்குள்ள காதலை வெளியிடுகிறார் ஆசிரியர்.

'நாள்தோறும், நான் கடற்காற்று வாங்க கடற்கரைக்குப் போகும்போது, கடலைக் காண்கிறேன். அப்போது, அறிஞர் அண்ணா எனது இதயத் திரை அரங்கிலே தோன்றுவதையும் காண்கின்றேன்.

இதே உணர்வைப் பெறுகிறவன் நானும், இந்த நினை வஞ்சலியை படித்தபோது எனக்கு பொறாமை, ஏற்பட்டது நண்பர் கலைமணியிடம்,

ஆம், என்னால் என் தந்தைக்கு, என் தலைவனுக்கு இப்படியொன்றை படைக்க முடியவில்லையே என்று!

உடன்பிறவா சகோதரர் புலவர் என்.வி.கலைமணியை நெஞ்சார வாழ்த்துகிறேன். என் தந்தையையும் தமிழன் அன்னையையும் வணங்கி.

அன்புடன் சி.என்.ஏ. பரிமளம்

எண். 7, அவின்யூ சாலை, சென்னை - 600 094, போன் : 28278570