பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 43

பாசத்திற்கும் அவருக்குமுள்ள பந்தம் - பாலுக்கும் அதன் வெள்ளைக்கும் உள்ள தொடர்பாகும் - அவ்வளவு நெருக்கம்.

கூடு கட்டத் தெரியாத குயிலுக்கு - காக்கையின் கூடு வாழ்விடத்தைத் தருகிறது.

நாடு ஆக்கத் தெரியாத தமிழனுக்கு - அண்ணாவின் நாக்கு; தென்னம் நரம்புகளைத் தேடித் தேடித் தந்தது.

அண்ணா இதயம், வானம் விரிவதற்கு முன்பே விரிந்திருக்க வேண்டும். X

ஏனென்றால்,

கொதிக்கும் கனலியையும்,

குளிரும் புனலியையும்,

உதிரும் விண்மீனையும்,

ஒழுகும் மேகத்தையும்,

சீறும் மின்னலையும்,

கீறும் இடியையும் தாங்கி,

'எதையும் தாங்கும் இதயத்தை" அவர் பெற்றிருந்தது அதனால்தானே.

ஏன் இதைக் குறிப்பிடுகிறேன், தெரியுமா?

பழம் விழுந்தவுடன் பிஞ்சு பூரிப்பதுபோல, சிலர் அண்ணா வீழ்ந்தவுடன் பூரிக்க ஆரம்பித்தார்கள்.

பாவம் அவர்கள்!

எந்தக் காம்பிலே இருந்து அண்ணா விழுந்தாரோ, அந்தக் காம்பிலே இருந்து அவர்களால் முளைக்க முடியவில்லை.

காலம் ஒன்றுதான்; எந்தக் காம்பிலே முளைக்கிறதோஅந்தக் காம்பிலே; இதுவரை முளைத்துக் கொண்டிருப்பதாகும்.

காலம்; தாயின் மார்ப்பைப் போல ஒர் அமுதக் குடம்.