பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 55

நிமிர்ந்த பொருளிலெல்லாம் நீயாகி இருக்கின்றாய். நின்ற பொருளுக்கும் நீயாகி நிற்கின்றாய்! நிற்காத பொருளுக்கும் நீ ஆகி நிற்கின்றாய். உன்னைப் படைத்தவன் நீ! உன்னில் இருப்பவன் நீ! புரியவில்லையே! மீண்டும் நீர்வீழ்ச்சி கேட்டது. இன்னுமா புரியவில்லை! அறிவு ஒரு குளுமையான அந்தி!

இரவுக்கும் - பகலுக்கும் இடையிலே இருக்கின்ற குழந்தை அது!

அந்தியைப் போல, குளிர்கின்ற அறிவு நீ! ஒளியில் அந்தி!

ஒலியில் யாழ்!

காற்றில் தென்றல்! ஆகாயத்தில் அண்டம்! நெருப்பில் இளஞ் சூடு! நிலத்தில் மருதம்:

நீரில் நீர்வீழ்ச்சி!

சந்தேகம் தீர்ந்ததா? மலை கூறி முடித்தது!

அதோ நீர்வீழ்ச்சி!

எல்லையற்ற கடலை நோக்கிக் கலந்தது!

கடல் தன் உப்புக் கண்ணிரால் - அதனை; ஏந்திக் கொண்டது.

நீர்வீழ்ச்சி தொடங்கியது தெரியாமல் தவிக்கின்றேன்!

அது முடிந்ததையும் தெரியாமல் முடிக்கின்றேன்.

అః ు. ခန္တီစ