பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. அண்ணா ஒரு வானவில்

நீலவான் நிர்மலமாக இருந்தது! முகிற் கூட்டங்கள் திடீரென்று அதை மூடிக்கொண்டன:

மின்னல் கீற்றுகள் மேகத்தின் முதுகில் வரி வரியாகச் சூடுகள் போட்டன:

மேகங்கள் துடித்து அலறின! கண்ணிர்த் துளிகளை உகுத்து உகுத்து; அவை கருத்து விட்டன:

நடுவானத்திலே நடைபெறும் - இந்த ரணகளப் போரைக் கண்டு, சூரியன் அச்சப்பட்டது!

ஒருவனை மற்றொருவன் உலகத்தில் அடித்துக் கொண்டு சா. தைச் சுயநலவாதி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல; அருணனும் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

மனிதக் கூட்டத்தினிடையே நடந்தது கொண்டிருக்கும் சண்டையில் - நான்கு பேர் புகுந்து அமைதியை நிலைநாட்டுவதைப் போல - மழையும்; ஒரு கணம் அமைதியை நிலை நாட்டியது!

மழைத் தோளால் நெய்யப்பட்ட பனித்திரையைக் கதிரவனுடைய கூரீட்டிகள் ஊடுருவின!

அதன் விளைவு, வானவில் வண்ணங்காட்டி மேற்கில் சிரித்தது!