எண்ணம்
கடல் விழுங்கிக் கபாடபுரத்தைக் கபளீகரம் செய்தது.
கவின் புகாரின் உடலை விழுங்கி, தென் மதுரை உயிரை மாய்த்து, அதனதன் வரலாற்றுப் புகழுக்குக் கல்லறை கட்டியது;
இந்த உலகத்தில் இன்று வரை, எண்ணற்ற எரிமலைகள், கடற்கோள்கள், பூகம்பங்கள் தோன்றின; மேதினியின் மேனியை ஆங்காங்கே திட்டுத் திட்டாக அழித்தன!
ஆனால், இந்த அவனிமட்டும் ஏன் முழுமையாக அழியவில்லை!
இந்த வினாவிற்கு எந்த ஞானியாலும், விஞ்ஞானியாலும், பகுத்தறிவாளனாலும், அறிவுலக மேதையாலும் இன்று வரை நேரிடையான பதிலைக் கூற முடியவில்லை!
மனித வாழ்வியல் இலக்கியத்திற்கு, இலக்கண வரம்பமைத்த திருவள்ளுவப் பெருமான் ஒருவர்தான், சரியான - நேரிடையான விடையை அளித்துள்ளார்.
"நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உண்டத்திவ் உலகு” என்றார்.
நேற்றிருந்தார், இன்று இல்லை. என்றாலும், நிலையாமை மிகுதியினை உடைய அவரது ஞானத்தை, அதனால் உருவாகும் புகழை, பெருமையை, இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறது என்றார்.
நாளை வரும் எதிர்காலத்திற்கு அந்த ஞானத்தை அறிவித்திட, அவற்றை நிலையாக நிறுத்திகொண்டு இந்த ஞாலம் இயங்கு