பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 59

மாயம்!

நிலையற்றது! தேவையில்லாதது!

கூடாதது: நினைத்தாலே பாபமானது!

"உயரே போன ஒருவன்; என்றாவதோர் நாள் - கீழே இறங்கத்தானே வேண்டும்!”

'கீழே இறங்குபவன்; மேலே ஏன் ஏற வேண்டும்?”

"வானவில்லே அப்படித்தான்! நம்பக் கூடாது - அதை நம்பி நலிந்தவர்களிலே நானும் ஒருவன்'

தலைகீழாக விழுந்து அடிபட்ட பிறகு, நான் கொடுத்த தத்துவங்கள் அவை.

அவ்வாறெனில்; எனக்கு மட்டும் அவாவென்பதே அறவேயிலையோ?

ஆசை வெட்கமறியாதது; கவலை நேரத்தில் தலை காட்டாதது.

இன்பம் வருகிற நேரத்தில் - இரவுக்கும் பகலுக்கும்; வித்தியாசம் தெரியாதது.

இது வேறு விஷயம்தான் இருப்பினும், இப்போது நான் இவ்விஷயத்தில் துறவி.

இதயக் குமுறலை இவ்வாறு இயம்பி முடித்தேன்!

ஊதா மலர்!

துரத்தில் ஊதாமலர் ஒன்று களுக்கென்று என்னைப் பார்த்துச் சிரித்தது.

நகை வந்த திக்கை நோக்கினேன்

மனிதனில்லை அங்கே மலர் இருந்தது. மலரே! நகைத்தது நீயா? என்றேன்.