பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$2 அறிஞர் அண்ணா நினைவஞ்சலி என்னே தம்பி, 'உலகே மாயம்! ஊதாவின் உரை கேட்டே

இவ்வாறு ஒடிந்து விட்டாயே!”

தான் நவீலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னாவாய்,

என்று அது நயமுடன் இடித்துரைத்தது:

செந்தூர மலர்!

சிரித்துக் கொண்டே செந்தூர மலர் தன் சிந்தனை

வளையத்தைச் சுழல விட்டது:

முத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்!

அதில் செக்கச் செவேலென்ற செந்தூர வடிவம்!

அப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றக் கதிரவனைக் காணும் போது, அவ் வடிவத்தால் ஊற்றி மெழுகியிருக்கும் என் பெயர் தான் செந்தூர வண்ணம்.

அருணனை மாயமென்றறையும் நீ, அண்ணாவின் புறப்படையின் முன்பு உதயசூரியனை மாயை என்று உரைப்பாயோ!

இஃதே போல இனியும் வெளியே இயம்பாதே; என்று செந்துர மலர் செப்பக் கேட்டேன்!

என்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, நான்பட்ட பாடு எனக்கன்றோ தெரியும்!

<> <> <>

நீலக் குவளை மலர்!

ஒடை ஒரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை; நொடியில் நான்

கேட்டேன்!

மலர் சிரிப்பா இது! என்று வியப்பால் நிமிர்ந்து பார்த்தேன்!

மேடைப் பூங்காற்று மோதியந்த மலர் மீது தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது.