பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கின்றதாம், அதனால் உலகமும் பெருமையை அடைகிறதாம்! அழிந்து விட்டால் இந்தப் பெருமை, புகழ், உலகுக்கு ஏற்படாதல்லவா?


அதனால்தான் இந்த உலகம், அறிவுக்கொடைகளாக ஒவ்வொரு துறையிலும் ஞானிகளை உருவாக்குகின்றது என்பதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக - அவரது ஞானத்திற்கு, பண்புக்கு, தொண்டுக்கு, புகழுக்கு, நிலையாமை மிகுதியினை வென்று, அழியாத ஞான சக்தியாக நிற்கின்றார்.


 “சாம்போது அண்ணா புகழ்பாடிச் சாகவேண்டும் - என்
சாம்பலும் அவர் புகழ் மணந்து வேக வேண்டும்"

என்பதே எனது எண்ணமாகும். அதன் சிறு அணுவே இந்த எனது 'அறிஞர் அண்ணா நினைவஞ்சலி' யாகும்.

என்.வி. கலைமணி