பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

77


எதிரியின் எலும்பைப் பொடியாக்கி, மாவாக்கி, வீரத் தாய் நிலத்திற்கு வீசும் தமிழர்களைப் போல - வியந்து நிற்கிறேன்.

மானம் என்ற பண்பைப் பெற்ற தமிழகத்தில்தானே, மானத்தால் பிறந்து மானத்தால் வளர்ந்து மானத்தால் சாகிறார்கள் தமிழர்கள்.

மோன நிலையிலே, முகிழ்த்த தத்துவத்தால் முளைத்த இனம் - தமிழ் இனம்.

ஞான ஒளியால்; ஞாலத்தில் உருவான வீர இனம்! தொல்புகழ் பூண்ட மரபு - தமிழர் திருக்குலம்.

அந்த மண்ணிலே பிறந்த மரமல்லவா நான்? எனக்கும் எங்கே போகும் அவை?

எனக்குப் பெயர் வேங்கையாற்றே. நானா கோழை போல் குனிந்து கிடப்பேன்?

அந்தத் தண்ணிரைப் பருகித் தானே என் உயிரணுக்கள் மூச்சு விடுகின்றன. எங்கே ஏகும் அந்த வீரப் பெரு மூச்சுக்கள்?

மறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை, ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை, மேதினிக்குப் பரப்பிய நாடு; தமிழ்நாடு தானே, தம்பி!

அத்தகைய மரத்திற்கு ஒர் ஆதி வரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி.

தமிழ்ப் புலவர்களும் - தமிழ் மக்களும்; காரணமில்லாமல் அதையும் புகழ்ந்து பாட - பேசமாட்டார்கள் அல்லவா? என்று கேட்டது வேங்கைப் பூ

பூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டாயா? என்றான் - மாயையை நம்பிக் கொண்டிருந்தவன்.

தம்பி; தம்பி! நான் எங்கே கூறினேன்? என் வரலாற்றில் ஒரு பகுதி இது. மேலும் கேள் என்று பேசிற்று பூ!

வேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் மார்சூப்லுயம் (Pterocarpus Marsuplum) என்றழைக்கின்றனர்.