பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


"கொல்லன், எரி பொன் பிதிரின் சிறுபல, தாஅய்,

வேங்கை விபுகும் ஒங்கு மலைக்காட்சி" என்று வரும் 'நற்றிணை'ப் பாடல் கூறுகிறது.

காந்தட் பூவைக் காட்டிலும் என்னிடத்தில் இருபது மகரந்தப் பைகள் (Arters) உண்டு.

எனவே, என்னிடத்தில் (Poller) தாது அதிகம் இருக்கும். இப் பூந்தாது பொன் போன்ற நிறமுடையது.

இந்தத் தாதைக் கண்டதும்; வண்டினம் கூட்டம் கூட்டமாக என்னைச் சூழும்; வட்டமிடும். ஏன்? - உண்ண - உவகையுற! சில நேரங்களில் வண்டுகள் என் மீது தங்களுடைய வாயை வைத்ததும். நான் அகமலர மலர்வதுமுண்டு.

வேங்கைப் பூ அதிகம் மலர்ந்த மரத்தில் மஞ்ஞைகள் வந்து கூடி மகிழும். ஏன் தெரியும்?

மயில்கள், வேங்கை மரத்தில் வந்தமர்ந்து, தங்களது தோகைகளை விரித்து ஆடிக் கொண்டிருக்குமாம்.

அவ் வமயம் எனது பூந் தாதுக்கள் - அம்மஞ்ஞைகளின் தோகைகளில் சொட்டும்.

அதனால் மயில்களது அழகுத் தோகைகள், அழகுக்கு அழகு பெறும் காட்சியாக இருக்குமாம்.

'பொன்னின் அன்ன பூஞ்சினை தழிஇ தமழ்தாது ஆடிய கவின் பெறு தோகை' என்று நற்றிணை 598 வது பாடல் கூறகிறது.

இத்துணைச் சிறப்பு பெற்ற வேங்கை மரம், தமிழகத்தில் மட்டுமே தனிச் சிறப்புடன் வளர்கிறது.

மாயையை நம்பும் மனிதா இஃதுதான் எனது வரலாறு - போதுமா விளக்கம்?

வேங்கைப் பூவே, உனது வரலாறு வேடிக்கை வேடிக்கை: என்றான் - மாயை மனிதன்!