பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 83

நீகூறியதைக் கேட்டேன். ஆனால், அஃது ஒரு கதையாகவே இருக்கிறது:

ஆனால், நேரில் உன்னைப் பார்க்க முடியவில்ைலையே என்றான்!

கானகமும்; மலையையும் நோக்கி ஓடிவந்து என்னை நீ காண முடியாது தான்! -

அந்தோ பரிதாபம்! பரிதாபம்! ஆனால், உன் அருகிலேயே ஒர் அறிஞர் இருந்தார்: .

நீ இருக்கும் இடத்திலேயே அவரும் உன்னுடன் நீக்கமற வாழ்ந்தார்:

அவரிடத்தே நான் கலந்திருக்கிறேன்! அதையும் கூறட்டுமா உனக்கு:

அப்படியா யார் அவர்? எங்கே கூறு என்று கேட்டான் அவன் பூ, கூற முற்பட்டு பேச ஆரம்பித்தது!

வேங்கை மரத்தின் வீரக் கதையை கேட்டாயல்லவா?

அந்த மரம், வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றிய மரம்!

வேங்கை மரத்தைப் போல நீண்டு வளர்ந்து, விண்முட்டும் வியப் போடு விளங்கும் திராவிடரியக்கத்தை, தென்னவர் கோமான் அறிஞர் அண்ணா வளர்த்துள்ளார்.

வேங்கை வளரும் இடம் கானகமும், மலைச்சரிவுகளும் தானே! ஆனால், அண்ணாவின் தலைமையிலே துவங்கிய இயக்கம்: வீரம் விளைந்த தமிழ் நிலத்திலே தோன்றியது என்பதை மட்டும் மறந்து விடாதே! தம்பி!

அவரது கட்சி ஒன்றுதானே "வேங்கை'யைப் போல வீரம் பொருந்தியப் பாசறையாக விளங்கியது!

அந்தக் கட்சியின் விரத் திருவுருவமாக - தன்னேரிலாத வழிகாட்டியாக - அண்ணா காட்சியளித்தார்....! வேங்கை மரத்திலே காட்சிதரும் பூவைப் போல!