புலவர் என்.வி. கலைமணி
89
சிரித்த வலியால் நான் வாடி வருந்தினேனம்மா!
முகிழ்த்த என் அழகை, நிலமிருந்த சிறார்க் குழு, கலையாதே வில்லே என்று கூறி - கையொலித்துச் சிரித்தது.
விலையில்லா அந்த விழாவிலே நீ கலந்து கொண்டாய்!
இடும்பையில் நானோ வானத்தில்! இன்பத்தில் நீயோ ஞாலத்தில்!
தாயே! உன் கைத்திறன் எனக்குப் புரிகிறது!
சீந்துவாரற்றுக் கிடந்த நீர்த்துளிகளை வான வில்லாய் விழாக்கோலம் காட்ட முடியும் என்ற தத்துவத்தை, என் வாயிலாக அறிவிக்கின்றாயா?
ஆம்பல்
பெற்றவளே!
நீரற்ற குளத்தில் ஆம்பலாக ஆக்கினாய் - என்னை:
நீண்ட நாள் வேர் செத்துக் கிடந்தேன்!
விண்கண் திறவாதோ! எழினி உடைந்து பொழியாதோ
என்றெலாம் ஏங்கியிருந்தேன்!
பெயல் துளியோடு இறங்கினாய்!
பேரின்பப் பூரிப்பால், அயலே நிற்காமல், அருகில் நின்றேன்.
உருகி நின்ற என் வேருக்கு உயிர்ப் பிச்சையளித்தாய்!
கேணி நிரம்பிற்று! நானும் தழைத்தேன்!
அம்மா! இல்லாதார் இருக்கின்ற இடமெலாம், துல்லிய இத்யத்தோடு துவானமாகி, கல்லியெறிந்தாய் இன்னலை!
வாழ வகையற்றோர் வாழ்கின்ற இடமெலாம், ஒய்வின்றி நீயே ஒடுகின்றாய் என்பதை - இதிலிருந்து அறிந்தேன் நான்!