பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 33

৪৫৫ালা பாறை திடீரென்று வெடித்தது! செத்துவிட்டேனோ, என்று அஞ்சினேன். காரணம்; என்மேல் சரிந்து அது வேறுபக்கம் விழுந்தது. தாயே! இது என்ன சோதனை: இறுகிய பாறை எப்படி இளகி வெடித்தது? இப்போதுதான் புரிகிறதம்மா எனக்கு: தவளையைப் போல் நீரிலும் இல்லாமல், நிலத்திலும் இல்லாமல், நிலையற்றவர்கள் - கட்டுக் குலையாத ஒர் அமைப்பில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன்!

மன உறுதி படைத்தவராக மக்கள் இருக்க வேண்டும்! என்ற கருத்தையும் பெற்றேன்!

நிலையற்ற உள்ளம் படைத்தோர், தன்னல முட்டைகளை இடுவரேயானால், அன்பால் இறுகிய பாறை - தேரையின் உயிர்ப்பால் பிளக்கும்!

அப்பெரிய அமைப்பின் கீழ் பூண்டாக இருக்கும் பாமரர், நசுங்கி நலிய ஏற்படும் என்பதை, என் மூலம் உணர்த்துகிறாயா?

தாயே! நீ இருக்கும்போது நாங்கள் ஏன் நலியப் போகிறோம்!

உன் பார்வைதான் எம்மை அடிக்கடி மனிதனாக்கி வர அறிவுரையாக உதவுகிறதே!

எங்களுக்கு நீ எவ்வித குறை நிறைகளையும் வைக்கவில்லையே!

ஒன்றுபட்டு வாழ - உனது பாசமெனும் உணர்ச்சியை வேறு, ஊட்டி விட்டாயே அம்மா தாயே! எனது வாழ்நாளில் என்னை எத்தனை உருவங்களாக அமைத்தாலும்; உனது எண்ணத்தையிே நான் எங்கும் எதிரொலிப்பேன்!

பாலைவனத்தில் சிறு மணலாக என்னை ஆக்கு! கோடியில் ஒருவனாகச் செய். உன் கை வண்ணத்தின் சிறு உருவம் நான்!