பக்கம்:அறிவின் கேள்வி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

இப்படி நான் சொல்லவில்லை பகுத்தறிவு இயக்கத் தோழர்கள் யாரும் எழுதி வைக்கவில்லை. இந்நாளைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தம் நூலில் (Discovery of India) குறித்திருக்கும் கருத்து இது.

நாங்கள் சொன்னால், நாத்திகம் பேசுகிறோம் என்பார்கள் நாட்டிலே செல்வாக்குப் பெற்றுவிட்டவர்கள்.

மனித உருவிலே கடவுள் உண்டு என்று பலரும் எண்ணிக்கொண்டிருப்பதே பெரும் விந்தை என மதிக்கிறார் நேரு. ஆனால் இன்று அதைவிட அபார அற்புத விந்தைகள் உண்டு. மனிதரைப் போல கடவுளர்களுக்கு மனைவி மக்கள், வாகன வசதிகள், சாப்பாடு பூஜை விழாக்கள் ஆடம்பர வகைகள், பட்டு பட்டாடைகள், பாலாபிஷேகங்கள், பள்ளியறைச் சம்பிரமங்கள் எல்லாம் செய்துவைக்கப்படுகின்றன. சோம்பேறிகளையும் நரித்தன நயவஞ்சகர்களையும் பெருத்துக்கொழுத்திட உதவுகின்றன.

கடவுளைக் குறை கூறினால், கடவுள் கேட்பார் என்பார்கள். கடவுள் யாரையும் எதற்காகவும் கேட்டுவிட்டதாகத் தெரியவில்லை. அவரது பண்பை, நியதியைப்பற்றி அறிவுக்குப் பொருத்தமான கேள்விகள் கேட்டு, சிந்தனைக்கு விருந்தளிப்பவர்கள்தான் அதிகரித்து வருகிறார்கள், காலப்போக்கிலே.

அறிவுத் தாகம் பெற்றவர்கள் மட்டுமே கடவுளின்-கடவுள் தத்துவத்தின் சிறுமைகளைப் பற்றி சிந்தித்துச் சொல்லுதிர்த்தார்கள் என்றில்லை. பக்தி செய்து முற்றிப்போய் வாழ்வின் வறட்சி உளத்தைத் தீய்க்க மனம் கசந்து