பக்கம்:அறிவின் கேள்வி.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

விரக்தியோடு பேசவந்தவர்களே உலகெலாம் ஆக்கிய அப்பனைப் பற்றி என்னென்னவோ சொல்லத் துணிந்தார்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. வெற்றி மிடுக்கோடு முன்னேறிய ஒருசிலரும் தம் ஆடம்பர வாழ்வின் எழினிலும் இவ்விதச் சந்தேகங்களை உதிர்த்திருக்கிறார்கள் என்பதற்குச் சரித்திரம் சான்று.

வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறிய நெப்போலியன் கூட உண்மையில் கடவுள் என ஒருவன் இருக்கிறானா? நீதிமான் எனப்படுகிற ஒருவன் இருந்தால் உலகில் வாழ்க்கை நிலை இப்படி இருப்பானேன்? நேர்மையாளர்கள் வாடுறோர்கள், அயோக்கியர்கள் சுகமனுபவிக்கிறார்களே! என்று சொல்லியிருக்கிறான்.

முசோலினி ஒருசமயம், மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பாதிரி ஒருவன் முன் போய், ‘கடவுள் இருக்கிறார், அவர் எல்லாம் வல்லவர் என்றால், என்னை இதோ ஐந்து நிமிஷங்களில் இந்த இடத்திலேயே செத்து விழச் செய்யட்டும்’ என்றுசொல்லி, பாக்கெட் வாட்சை எடுத்து நீட்டியபடி நின்றாராம். பாதிரி என்ன செய்ய முடியும்? ‘சைத்தானே, தூரப்போ!’ என்றார். முசோலினி சரியாக ஐந்து நிமிஷங்கள் கழித்ததும், கடியாரத்தை சட்டைப் பைக்குள் திணித்தபடி கம்பீரமாக நடந்தாராம்.

சரித்திரம் குறித்து வைத்திருக்கிற—அல்லது குறித்துவைக்கத் தவறிவிட்ட— இத்தகைய உதாரணங்கள் எத்தனையோ இருக்கலாம்.

அதெல்லாம் எதற்கு? ஒவ்வொரு மனிதனும் வழ்வில் எப்ப்பொழுதாவது ‘கடவுள் இருக்கிறாரா? உண்மையாகவே, நீதியும் நேர்மையும் தர்மசிந்தையும் அன்பும்