பக்கம்:அறிவின் கேள்வி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதரித்துதான் ஆக வேணும் .ஆனால் கடவுள் எல்லாம் வல்லவர் ஆயிற்றே ஆகையினாலே அறிவு புகட்டவும் வளர்ச்சிக்கும் வழியாக கடவுள் கொடுமையைக் கையாளுகிறார் என்றால் கடவுளுக்கு கொடுமை பிடிக்கிறது என்றாகிறது இல்லையெனில் கொடுமையை ஆதரிக்கமாட்டார்.அதனால் கொடுமையில் ஒரு மோகமிருக்கிறது இல்லையெனில் அவர் அதை விரும்பமாட்டார் .கொடுமையில் ஆசை உண்டு,அதனால் அவர் கொடியவராக இருக்கிறார் என்றால் அது மடத்தனம் .இன்னொன்று கடவுளை மீறி பாவம் புகுந்திருக்க வேண்டும். அப்படியானால் அவர் சர்வ வல்லமை உள்ளவர் அல்லர்.அல்லது அவரது அனுமதியோடுதான் பாபம் வந்திருக்க வேண்டும். அப்படியெனில் பாபம் அவரது ஏஜன்டு அவர் பாபத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அப்படியெனில் அவர் பாபத்தை நேசிக்கிறார் என்றாகிறது.அதனால் பாபத்திடம் அவருக்கு மோகம் என்று ஏற்படுகிறது.அப்படியானால் அவர் பாபிதான்.ஆக இதுவும் முட்டாள்தனமேயாகும். கெட்டதை விட நல்லது உயர்ந்தது.நன்மை எப்பொழுதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம்.தீமை குறைந்து கொண்டே வருமாம்.அதுசரி அன்பே கடவுள் என்றால் எனய்யா இந்த தீமை தலை காட்ட வேணும் ? ஒருவேளை நாடகச்சுவை விரவியோட வேணும் என்பதற்காக வில்லன்கள் வந்து விளையாட பின் மூன்றாவது பாகத்திலேதான் தர்மம் வெல்லும் என்கிற பண்புகளுடைய நாவல்தானோ இந்த உலகம்? என்ன இருந்தாலும் சிருஷ்டித்துவிடப்பட்ட ஜீவன்களின் உணர்ச்சிகளைப்