அது வரும்பொழுது நாம் தூங்குவதுபோல் கிடக்கிறோம்.அது வந்து போனதாக உணர முடிவது கண் விழித்த பின்னர் தானே! வேதனை, துயரம், வியாதி, மரணம் இவைதானா அன்பின் சொரூபமான கடவுள் கண்டவை. மற்றவைகளை ஒழித்துக்கட்டாமல் எந்த மிருகமும் உயர்ந்து விடக் கூடாது-இதுதானா கருணாமூர்த்தியான கடவுளின் கட்டளை? சோகத்தின் பின்னால் தங்கமய நலமுண்டு. கொலையின் அடிப்படையில் ஈவும் இரக்கமும் உண்டு என்று சொல்வதால் பயனில்லை.நல்லன உருவாகக் கேடுகள் தான் கருப்பொருளாய் அமைய வேண்டும் என்று வகுக்கப்பட்டிருப்பதேன்? உபயோகமுள்ளது என்பதனால் வேதனை, வேதனை குறைந்த பண்பாகிவிடுவதில்லை.வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதற்காக கொலை குறைந்த பட்சக் கொலையாகிவிடாது. இதோ கையிலே ரத்தம் கறையாகப் படிந்திருக்கிறது. அரேபியாவின் அத்தர் தினுசுகள் அத்தனையும் இதை இனியதாக்கி விட முடியாது.
ஆகவே, நாம் முடிவுகட்ட வேண்டியதுதான் என்ன? இவ்வளவே தான்-இன்று நாட்டிலே வழங்கிவரும் சித் தாந்தம் தவறானது. கடவுளை விளக்க முயலும் காரியமெல் லாம் கேலிக்கும் சிரிப்பாணிக்கும் இடமளிக்கிற முடிவுக்கே நம்மை இழுத்துச் செல்லும். ★