பக்கம்:அறிவின் கேள்வி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.நாங்கள் சொல்லுவது

“சிந்திக்கும் திறனும், மேதையும் மிகுந்த ஒரு சில தீரர்களுக்கும், அதிக மதப்பற்றும் அறியாமையும் நிறைந்த பெருவாரியான மக்களுக்குமிடையே பெரும் மாணப் போராட்டம் நடந்து வருகிறது, யுக யுகங்களாக அறிவுக்கும் பக்திக்குமிடையே நிகழும் போர்தான் இது. இந்த ஒரு சிலர் காவலிக்கிறார்கள் சித்தனைக்காக, தன்மானத்துக்காக, சட்டத்துக்காக, சுதந்திரத்துக்காக, தேர்ந்து தெரிந்தவைகளுக்காக, இவ்வுலக இன்பங்களுக்காக ஆனால் எண்ணிலா மற்றவர்களோ தப்பெண்ணத்திற்கு, பயத்துக்கு சித்துவிளையாடல்களுக்கு அடிமைத் தனத்துக்கு அறிய முடியாதவைகளுக்கு, இனி என்றோ எங்கோ வரவிருக்கும் அயரங்களுக்குமாக முறையிடுகிறார்கள். இந்த ஒரு சிலர் சொல்கிறார்கள் சிந்தியுங்கள் என்று ‘நம்புங்கள்’ என்று ஆக்கிணையிடுகிறார்கள் மிகப் பலர்."

--- இப்படிச்சொல்லியிருக்கிறான் இங்கர்சால்.

அவனுக்கு முன்னும், அவனுக்குப் பின்னும் அறிவு வளர்ச்சிக்காக, சிந்தனையின் மேன்மைக்காக. உண்மையின் உயர்வுக்காக உள்ளத்தில் பட்டதை உள்ளபடி உறுதியோடு சொல்லி வந்திருக்கிற அறிஞர்கள் பலர்.

எனினும், கால வெள்ளத்தாலும் அசைக்க முடியாத கரும்பாறைகள் போல் அழுத்தமாக வேரரோடியிருக்கும் அச்சம், அறியாமை, நம்பிக்கை பக்தி இவைகள் மீது கண்களை மூடியபடி உட்கார்ந்துகொண்டு உண்மைகளைக் காண மறுப்பவர்கள் பலப்பலர்! இவர்களது எள்ளுதல்களையும்