பக்கம்:அறிவின் கேள்வி.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

உலக நியாதியை, உயிர்க்குல அவதியை, மக்கலீன் வாழ்வு நிலையை கவனித்து மனித உனார்ச்சியோடு சிந்தித்துப் பார்க்கிர எவரும் ‘கடவுள் என ஒருவன் இருக்கின்றானா?’ என்றூ சந்தேகிக்காமல் இருக்க முடியாது. தன் எண்ணாத்தை சொல்லிலே, எழுத்திலே,கதையிலே தீட்டத் துணியும் போது, சிந்திக்கவிரும்பாதவர்களும், சிந்திப்பதை விரும்பாதவர்களும் சீற்றாம் கொள்கிறார்கள்> சிரித்து ஓதுக்கிவிட முடியாது, அறிவு வளரவே செய்யும் என்றூ உணார்ந்தால், ஆவேசம் கொண்டு அடக்குமுறையாளர்களாகிவிடுவார்கள்.

‘என் பாட்டன் பட்டை நாமம். போட்டிருந்தான்; நானும் தீட்டுகிறேன்...’ ‘என் அப்பனும் மாமனும் சுப்பனும் குப்பனும் விபூதி பூசினார்கள்; ஆகவே நானும் துலாம்பரமாக அள்ளிப் பூசுகிறேன்’ என்ற கணக்கிலே அர்த்தம் உணராமல், பழக்கத்தின் அடிமைகளாய்—பட்டம் பதவிகள் பெற்றவர்களாயினும், அறிஞர்கள் ஆசிரியர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்களாயினும்—தர்மம் வழுவாமல் காத்து வருவதாக வெளிச்சம் போடுகிறவர்கள் அறிவின் விழிப்பை ஆதரிக்கமாட்டார்கள். இதற்கு இன்றைய நாட்டு நடப்பு நல்லதோர் எரித்துக்காட்டு.

கடவுள் இல்லை என் சொல்பவர்கள் அதிகரித்து விட்டார்களாம். இதற்கு அசெம்பிளியிலே கேள்விகள் பிறக்கும். வாழ்விலே நேர்மையாக வாழமுயன்று முடியாமல், வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டிருப்பதால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் இயலாமல், பிழைப்புக்கு வழியின்றி—வாழ்வின் இன்றியமையாத் தேவைகளைப் பெறக்கூடத் துப்பின்றீ அல்லாடுகிறவன் அயோக்கியர்கள் வாழ்வதைக் கண்டு குமுறினால், குமுறலின் விளை-