பக்கம்:அறிவியற் சோலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அறிவியற் ঠেও উচ্চ --- ___ _ ல்ை இந்தியாவின் பொருளாதாரமும் உயரும் என் பதிலே ஐயம் ஏதும் இல்லை. எனவே சப்பானிலே உள்ள சிலபல சிறுவகைத் தொழில்களைப் பார்ப் போம். -- தொழில் நுணுக்கமிக்க தொழில்களைத் (Labour Industry) தோற்றுவித்து நன்கு வளப்படுத்துவதின் மூலம் நல்ல வருவாயினைப் பெறலாம். அது மட்டு மல்ல ; ஏராளமான மக்களுக்கு வேலையளித்து வேலை யில்லாக் கொடுமையினை ஒரளவுக்குக் குறைக்கலாம். இத்தகைய தொழில்கள் சப்பானில் பல நடைபெறு கின்றன, அவைகளில், புகைப்படத் தொழிற்சாலை, இயந்திரப் பொம்மைத் தொழிற்சாலை, மின்சாரக் குமிழ்விளக்குத் தொழிற்சாலை, வரையாணித் தொழிற் சாலை என்ற இந்நான்கு தொழிற்சாலைகளும் குறிப் பிடத் தக்கனவாகும். புகைப்படத் தொழிற்சாலை இத்தொழிற்சாலை டோக்கியோ நகரத்திலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள ஒரு சிற்றுாரில் அமைந் துள்ளது. இத் தொழிற்சாலை இருபத்தைந்து ஆண் களுக்கும் இருபத்தைந்து பெண்களுக்கும் வேலை யளிக்க வல்லது. இவர்களில், நால்வர் வேலைத்திறம் பெற்ருேராயும் ஏனையோர் அத்திறம் அற்ருேராயும் இருந்தால் பிழையில்லை. இங்கே வேலைத்திறமுடைய ஓர் ஆணுக்கு மாத ஊதியம் 340 வெண்பொற் காசு கள்; ஒரு பெண்ணுக்கு 150 வெண்பொற் காசுகள் ஆணுக்கு நாள் ஒன்றுக்கு வேலை நேரம் பத்து மணி பெண்ணுக்கு எட்டு மணி. இருபாலாருக்கும் மாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/100&oldid=739241" இலிருந்து மீள்விக்கப்பட்டது