பக்கம்:அறிவியற் சோலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான். 97 மொன்றுக்கு இரு நாட்கள் ஓய்வு கிடைக்கும. இந்த ஆலையின் முதலீடு (Capital) நான்கு லட்சம். குறைந்த செலவில் நிறைந்த வருவாய் தரும் தொழில் இஃதே. இதன் மாத வருவாய் ஒன்றறை லட்சம். இதனைச் சார்ந்த வேறு சில துணைத் தொழில்களும் வளர்க்கப்படுகின்றன. இத் தொழிலுக்கு மூலப் பொருள் பித்தளை (Brass) ஆகும். இதனைப் பணம் கொடுத்தும் கடனுகவும் சந்தையில் வாங்குவர். இத் தொழில் மின்சாரத்தில்ை இயங்குகின்றது. - இயந்திரப் பொம்மைத் தொழிலகம் இத்தொழிலகத்தில் 23 ஆண்களும், 43 பெண் களும் வேலை செய்கின்றனர். வேலைத்திறம் பெற்ற ஆணுக்கு மாத ஊதியம் 150 வெண்பொற் காசுகள் ; பெண்ணுக்கு 100 வெண்பொற் காசுகள். வேலைத் திறம் பெரு இருபாலாருக்கும் மாத ஊதியம் முறையே 75ம், 60-ம் ஆம். இத்தொழிலின் முதலீடு ஒரு லட்சம்; மாத வருவாய் 50,000 வெண்பொற் காசுகள். எல் லாச் செலவுக்கும் பிறகு கிடைக்கும் ஊதியம் நூற் றுக்குப் பத்தாகும். முதலாளிக்கும் தொழிலாளிக்கு மிடையே போட்டியில்லை ; புகைச்சல் இல்லை. மாருக நட்புள்ளது ; நல்லுறவு நிலவுகிறது. மின்சாரக் குமிழ் விளக்குத் தொழிற்சாலை டோக்கியோ நகர த்திலி ருந்து பத்து மைல் தெ ாலைவிலுள்ள ஓரிட த்தில் இத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதிலே பத்தொ ன்பது ஆண்களும் பதினன்கு பெண்களும் வேலை செய்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/101&oldid=739242" இலிருந்து மீள்விக்கப்பட்டது