பக்கம்:அறிவியற் சோலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆப்பிரிக்க நீக்ரோ மொழிகள் (AfricanNegro). 9. அமெரிக்கச் செவ்விந்திய மொழிகள் (Ameri. can-Indian). 10. 17p Gudrufléssir (Other Groups). வரலாறு, போர், பொருளியல், கலாசாரம், அரசியல் ஆகிய இவற்றின் அடிப்படையில் ஆராய்ந் தோமானல், உலகில் தலைசிறந்த மொழிகள் என்று எண்ணுவதற்குத் தகுதி வாய்ந்தவை நூற்றுக் கணக்கில்தான் இருக்கும். எனினும் எல்லா மொழி களும் ஒரே சிறப்புடையன என்று சொல்வதற்கில்லை. அவற்றிடையே எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. ஒரு மொழியின் சிறப்பிற்கு எத்தனையோ கார ணங்களை எடுத்தியம்பலாம். ஒரு மொழியைப் பேசுவோரது எண்ணிக்கை கொண்டே அதன் சிறப்புக் கருதப்படுகின்றது. அதாவது எண்ணிக்கை மிகுதியாய் இருந்தால் ஒரு மொழி சிறந்ததெனச் சிலர் நினைக்கின்றனர். அது முற்றிலும் தவருனதாகும். ஒரு மொழியினைப் பலவகைக் கோணங்களிலிருந்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருதலே பொருத்த முடையதாகும். பேசுவோரது எண்ணிக்கையைப் பார்ப்பதைவிட அம்மொழி பண்பட்ட மொழியா, வரலாற்றுச் சிறப்புடையதா என்பன எல்லாம் அறிதல் வேண்டும். உதாரணமாக சுபானிசு-கிரேக்க மொழிகளை எடுத்துக்கொள்வோம். இன்று சுபானிசு (Spanish) மொழியினைப் பேசும் மக்களது எண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/11&oldid=739245" இலிருந்து மீள்விக்கப்பட்டது