பக்கம்:அறிவியற் சோலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வரலாறு 7 அறுபது லட்சம் உள்ளனர். இது தவிர கனடா விலும், உலகில் பல்வேறு ப்ாகங்களிலும் பிரெஞ்சு , மக்கள் ஆதிக்கம் செலுத்திய பல பகுதிகளிலும் இம் மொழி நின்று நிலவுகின்றது. மேலும் ஐரோப்பிய நாடுகளில், கற்றறிந்த மக்கள் பிரெஞ்சு மொழியின் சிறப்பினைக் கருதி, அதனைக் கற்று வல்லுநர்களாய் விளங்குகின்றனர். அமெரிக்கா, ஹாலந்து, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில், பிரெஞ்சு மொழி பொதுவாகவே கற்றறிந்த பலரால் கையாளப்படு கின்றது. இதுபோன்றே, இந்தோ-ஆரிய, திராவிட, முண்டா மொழிகளைத் தாய் மொழிகளாகவுடைய இந்திய மக்களுக்கு, ஆங்கில மொழி பொது மொழி யாகப் பயன்படுகின்றது. இதற்குக் காரணம் அரசியல் செல்வாக்கே. இவ்வாறு அரசியல் செல் வாக்கானது, ஒரு மொழியினைப் பேசுவோரது எண்ணிக்கை அதிகமாதற்குக் காரணமாக அமை வதைக் கண்கூடாகக் காண்கின்ருேம். இதுபோன்றே கலாசாரமும் மொழித்துறையில் பலமாற்றங்கள் ஏற் படுவதற்குக் காரணமாக அமைகின்றது. இந்திய மொழிகள் அடுத்து இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மொழிகள் குறித்து வரைவாம். நமது இந்திய நாட் டிலே இன்று வழங்கும் மொழிகள் நூற்று எழுபத்து ஒன்பதாம். இவற்றுள்ளே பெயரளவில் நிற்பவை சில ஏட்டளவில் வாழ்வன சில; பேச்சளவில்-உலக வழக்கில் நிலவுவன சில: இத்தனை வகையிலும் செழித்து ஆல் போல் வளர்ந்து அருகுபோலப் பரந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/13&oldid=739247" இலிருந்து மீள்விக்கப்பட்டது