பக்கம்:அறிவியற் சோலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வரலாறு 9 _ மொழிகள், திருந்தா மொழிகள் என இருவகையாகப் பிரிப்பர் அறிஞர். திருந்திய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு என்பன. துரதம், கோடம், கோந்த், மால்டோ, ஒரோவன், கூயி, கோலாமி, பிராஹாஅய், படகா என்பன திருந்தா மொழிகளாகும். இவையனைத்திற்கும் தாய்மொழி, சொற்கள் மிகப் பலவாகக் கடன் கொடுத்த மொழி தமிழ் மொழியே. இத்தகைய மொழியினைப் பேசுவோர் தொகை இன்று தமிழ் நாட்டில் ஏறக்குறைய மூன்று கோடியாகும். தமிழ் நாட்டின் எல்லை வட வேங்கடம் முதல் தென்குமரி வரையாகும். மேலும் இம்மொழி ஈழத்தின் வடபகுதி, பிளுங்கு, சிங்கப்பூர், தென்னுப் பிரிக்கா, மலாய், வட இந்தியாவில் ப ம் பாய், கல்கத்தா போன்ற இடங்கள், இங்கெல்லாம் மிக விரிவாகப் பேசப்படுகின்றது. தமிழ் மொழி ஒன்று தான் திராவிட இனத்தைச் சேர்ந்த எல்லா மொழி களைக் காட்டிலும் வடமொழிக் கலப்புக் குறைந்த அளவில் உடையதாகும். மேலும் இலக்கிய வளம் செறிந்ததாகும். அடுத்து தெலுங்கினைப்பற்றிக் கூறுவோம். இம் மொழி தமிழ் நாட்டிற்கு வடக்கேயுள்ள தெலுங்கு நாட்டிலும், ஐதராபாத்திலும் வாழும் ஏறத்தாழ மூன்றேகால் கோடி மக்களால் பேசப்படுகின்றது. வடமொழியாளர் தெலுங்கு நாட்டாரை ஆந்திரர் என்பர். தெலுங்கு என்பது தேன்போன்ற இனிமை யுடையது என்று பொருள்படும். முதலில் இம்மொழி தமிழினையே ஒத்து இயங்கி வந்தது. பிறகு நன்னய பட்டர் போன்ற வடமொழியாளர்கள் வடமொழி யிலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/15&oldid=739249" இலிருந்து மீள்விக்கப்பட்டது