பக்கம்:அறிவியற் சோலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணம், வடமொழிச் சொற்கள் முதலியவற்றை அளவிறந்து சார்த்திக் களித்தனர். ஆளுல் பின்வந்த சைவப் புலவர்கள் தமிழ்ச்சார்பினை மீண்டும் உண்டாக் கினர். எனினும் வடமொழியாளர் முயற்சி தொடர்ந்து நடைபெற்றதால் அவர் போக்கே வென்றது. மைசூர் மாநிலம், மராத்தி நாட்டின் தென்பகுதி என்பவற்றில் திராவிட மொழிகளில் ஒன்ருன கன்ன டம் பேசப்படுகின்றது. நீலகிரிப் படகர் பேசுவது பழங் கன்னடம். கன்னடம் பேசுவோர் ஏறத்தாழ ஒன்றரைக் கோடியாகும். சில நூற்ருண்டுகளுக்கு முன் இருந்த கன்னடம் தமிழ் போலவே அமைந் திருந்தது. அது ஹள கன்னடம் (பழங்கன்னடம்) எனப்படும். இன்றுள்ளது ஹொச கன்னடம் எனப் படும். இதனைப் பேசும் மக்களின் தொகை ஒன்றே கால் கோடிக்கு மேற்பட்டது எனக்கூறலாம். இதனை யும் தெலுங்கைப்போல மிகுதியாக வடமொழிச் சார் பாக்கினர் வடமொழியாளர். இது போ ன் றே மலையாள மொழியும் பிற்காலத்தில் வடமொழியாளர் களால் திரிக்கப்பட்டது. இது தொடக்கத்தில் மிகுதியும் தமிழையே ஒத்திருந்தது. இம்மொழி திருவாங்கூர், கொச்சி என்ற இரண்டு மாநிலங்களில் வாழும் ஒன்றேகால் கோடிக்கு மேற்பட்ட மக்களால் பேசப் படுகின்றது. துளு, மைசூர் மாநிலத்தை அடுத்தோடும் கல்யாணபுரி, சந்திரகிரி என்ற ஈராறுகட்கிடையே வாழ்வோர் பேசும் மொழி. எண்ணிக்கை சுமார் எட்டு லட்சமாகும். இதில் இலக்கிய, இலக்கண வளம் அவ்வளவு தூரம் இல்லை. குடகு என்னும் மொழிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/16&oldid=739250" இலிருந்து மீள்விக்கப்பட்டது