பக்கம்:அறிவியற் சோலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழு த்தோ இலக்கியமோ இல்லை. இதனைப் பேசுவோர் அறுபதியிைரத்துக்கு மேற்பட்டவராவர். திருந்தா மொழிகளில் ஒன்ருன தூதம், நீலகிரி மலையின் பழங்குடி மக்களின் மொழியாகும். இதனை ஆயிரத்திற்குட்பட்டவர்களே பேசுகின்றனர். கோட மொழியும் முன்னதைப் போன்றதே. சுருங்கக்கூறின் இம் மொழி கொச்சைக் கன்னடமாகும். கோந்த் என்னும் மொழியும், கூ என்னும் மொழியும் முறையே மத்திய இந்திய மலைகளிலும், அதனைச் சார்ந்த இடங்களிலும், ஒரிசாவைச் சார்ந்த குன்றுகளிலும் வழங்கப்பெறுகின்றன. இம் மொழிகளைப் பேசுவோர் தொகை முறையே பதினைந்து நூருயிரமும், ஐந்நூ ருயிரமும் ஆகும். வங்காளத்தைச் சார்ந்த மலைகளில் வாழும் பதினுயிரம் மக்களால் பேசப்படும் மொழி ராஜ்மஹாலாகும். ஒரோவன் என்னும் மொழி சூடி நாகபுரியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழும் எண்ணுருயிரம் மக்களால் பேசப்படுகின்றது. இறுதியாக உள்ள பிராஹஅய் மொழி பலுச்சிஸ்தானத் தில் வாழும் ஒருசாரார் பேசும் மொழியாகும். திராவிட இனத்தைச் சார்ந்த இம்மொழி இந்தியாவின் வடமேற்கு மூலையில் பேசப்படுவது விந்தையினும் விந்தையே. ஆக்ட்ரிக் மொழிகள் இந்தியத் துணைக் கண்டத்திலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுல் வாழ்ந்த மக்கள், கரு 1றமும், சுருள் தலையும் உடையர். இவர்கள் ஆப்பிரிக்காவில் வாழும் நீக்ராய்டு (Negroid) என்ற 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/17&oldid=739251" இலிருந்து மீள்விக்கப்பட்டது