பக்கம்:அறிவியற் சோலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அறிவியற் சோலை --- --------- *--


== = --- --

பிரிவினரை ஒருவாறு ஒத்திருப்பர். இன்று அந்தமான் தீவுகளில் பெரும்பான்மையோராக இருப்போர் இவ் வினத்தோர்தான். இந்த நிலையில் பாலச்தீன் என்ற தேயத்திலிருந்து தொன்மையான மக்கள் இந்தியா நோக்கி வந்தனர். பிறகு இவர்கள் இந்தியா விலிருந்து இந்திய சீனு (Indo-China) நோக்கிச் சென்றனர். இதன் பிறகு மத்தியதரைக் கடற்கரை யிலிருந்து ஒரு பிரிவினர் வரலாயினர். வந்தவர்கள் காடும் மேடும் நாடும் கடந்து இந்தியாவை அடைந்து வட இந்தியாவிலுள்ள மலைகளிலும், காடுகளிலும், பிற இடங்களிலும் வாழத் தலைப்பட்டனர். இம் மக்களே இன்று ஆச்ட்ரிக் என்ற மொழியினைப் பேசுகின்றனர். இவர்கள் இந்திய மக்கள் தொகை யில் 13%-ஆம். அஃதாவது ஐந்து மில்லியன். இந்த ஆச்ட்ரிக் மொழி மூன்று வகையாம். கோல், ஆசி. நிக்கோபாரிசு என்பனவாகும். கோல் என்பது முண்டா எனவும் அழைக்கப்படுகின்றது. சந்தர்லி, முண்டாரி, ஒ, கோர்க்கு, சவாரா, கடபா என்ற மொழி களும் கோல் என்ற மொழியினுள் அடங்கும். எனி னும் சந்தர்லி என்ற மொழியே இவற்றுள் அதிகமாகப் பேசப்படுகிறது. திராவிட ஆரிய மொழிகள் இந்தியாவிற்கு வந்த ஆரிய மக்கள், இங்கு வழங்கி வந்த திராவிட மொழியோடு, தம் மொழி களையும் கலந்து பேசத்தொடங்கினர். நாளடைவில் அவர்கள் பேசுகின்ற மொழி திராவிட மொழி, ஆரிய மொழி என்ற இரண்டினையும் சேருத வேருெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/18&oldid=739252" இலிருந்து மீள்விக்கப்பட்டது