பக்கம்:அறிவியற் சோலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி வரலாறு 13 மொழியாக மாறியது. அந்த மாறிய மொழிகளில் ஆரிய மொழிச் சொற்களும், திராவிட மொழிச் சொற்களும் காணப்பட்டன. இவ்வாறு திராவிட மொழி, ஆரிய மொழிச் சொற்கள் கலந்த மொழியினை முதலில் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தோ ஐரோப்பிய மொழியென அழைத்தனர். இன்னும் இந்தோ செர் மானிய மொழியினம், ஆரிய மொழியினம் என்ற வேறிரண்டு பெயர்களுமுண்டு. ஒரு சிலர் ஆரிய மொழியினம் என்பது பொருத்தம் என்பர். ஆனல் இம் மொழியினத்திற்குத் திராவிட ஆரிய மொழியினம் எனலே மிகவும் பொருத்தமுடைத்தாம். வட இந்தியாவில் ஆரியர்கள் தம் மொழிகளைத் திராவிட மொழியோடு கலந்து வெற்றி பெற்றது போன்று, தென்னிந்தியாவில் வெற்றிபெற இயல வில்லை. அதுவும் தென்னுட்டுத் தமிழினைப் பொறுத்த வரையில் முழுத் தோல்வி எனலாம். இந்தி, உருது, வங்காளம், ஒரியா, குசராத்தி, சிந்தி, காசுமீரி, பஞ்சாபி, நேபாலி, அசாமி, என்பவை திராவிட ஆரிய மொழி கள். தமிழ் முதலியன திராவிட மொழிகள். திராவிட மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை ஏற த்தாழ பத்துக் கோடியாகும். திராவிட ஆரிய மொழி பேசு வோரின் எண்ணிக்கை இருபத்தைந்து கோடி என்க. திராவிட ஆரிய மொழிகளிலே இன்று மிகச் செல் வாக்குப் பெற்று விளங்கும் மொழி இந்தி மொழியே, இதுவே இந்திய மக்களின் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி. இது கருதியே நமது இந்திய அரசாங்கத்தார் இம்மொழியினை இந்திய நாட்டின் பொது மொழியாக ஆக்க எண்ணுகின்றனர். -i-i = -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/19&oldid=739253" இலிருந்து மீள்விக்கப்பட்டது