பக்கம்:அறிவியற் சோலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டில் பேக்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த அடா என்னும் சிற்றுாரில் பிறந்தார். இவருடைய குடும்பம் நாட்டின் நலனுக்காக எழுந்த போராட்டங்களில் பங்கு பெற்றதன் மூலம் கங்கு கரையிலா மதிப்பைப் பெற்று இலங்கியது. இவருடைய பாட்டனர் வேற்று நாட்டார்களாகிய ஆஸ்டிரியர்களின் ஆதிக்கத்தி லிருந்து ஹங்கேரி நாடு விடுபட, போராடிய பொழுது சாதித்த சேவைகள் பாராட்டத் தக்கன. இவரது தந்தையான ஜோசப் ராகோசி சிறந்த உழைப்பாளி பாவார். ஆனல் அவர் வறுமையின் கூட்டாளி. பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அவர் பெரிதும் துன்பப்பட்டார். வருமைப் பிணியிலிருந்து தம் குடும்பத்தைக் காப்பதற்காக வேண்டி இடம் விட்டு இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. rாகோசிக்கு ஏழு வயதாயிருக்கும்பொழுது சோப்ரன் Sopron) GT6örss)|lb இடத்திற்குக் குடியேறினர். அங்குதான் அவரது படிப்பும் ஆரம்பமாயிற்று. நாளடைவில் பள்ளிப்படிப்புடன் நின்றுவிடாது எல்லாப் புரட்சி இயக்கங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆரம்பித்தார். இதற்கு வழிகாட்டியாக இவரது உறவினருள் ஒருவர் விளங்கினர். இவர் சோசியலிசத்தில் சிறந்த பற்றும் உறுதியும் உடையவர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் ராகோசி உயர் நிலைப் பள்ளிப் படிப்பிற்காக சீஜெட் என்னும் நக ருக்கு அனுப்பப்பட்டார். இதே நேரத்தில் அவரது. குடும்பம் சாபாட்கா என்னும் இடத்தில் வாழத் தொடங்கியது. இவ்விடத்தில் உயர் நிலைப் பள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/21&oldid=739255" இலிருந்து மீள்விக்கப்பட்டது