பக்கம்:அறிவியற் சோலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அறிவியற் சோலை _ இல்லாத காரணத்தினுல்தான் ராகோசி மேற்சொல்லிய வாறு வேற்றுாருக்கு அனுப்பப்பட்டார். அங்கு பயிலுங்கால் கூர்த்த மதியும் நன்னடத்தையும் உடை யவராக இருந்தார். சொற்போர்களிலெல்லாம் சிறந்த பங்குகொண்டார். உழைப்பாளர் உயர்விற்காக நடத்தப்பட்ட இயக்கங்கள் பற்றிய செய்திகளை எல் லாம் ஆர்வமுடன் அறிந்து, பின்னர் அவை குறித்து துணுகி ஆராயத் தலைப்பட்டார். பொதுவுடமை வாதிகள் வெளியிடும் கருத்துக்களை எல்லாம் தன் கருத்திலே கொண்டார். அவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் அனைத்தையும் வாங்கிப் படித் தார். மேலும் உழைப்பாளிகள் நடத்திய ஊர்வலங் களிலும், பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்வார். கலந்து கொள்வதோடு நில்லாது, அவர்களது ஆக்க வேலையிலும் ஊக்கம் காட்டி வந்தார். பள்ளி வாழ்க் கையில் ராகோசி மாணவனுக மாத்திரம் இராது அவருடன் பயின்ற கல்வியில் பின்தங்கிய பல மாண வர்களுக்கு ஆசிரியராக விளங்கியமை குறிப்பிடத் தக்க தொன்ருகும். அம் மாணவர்கள் தந்த பணத் தைக் கொண்டே தன் செலவை முடித்துக் கொண் டார். 1910-ல் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்ற இவர் கீழை நாட்டுக் கல்வி பயில புடாபெஸ்ட் நகரத்திற்குச் சென்ருர். அங்குதான் அவரது அரசியலறிவு விரிவடைந்தது ; ஆர்வமும் அதிகமாகியது. அரசியல் வேலைகள் பலவற்றில் ஈடுபடவும் ஆரம்பித்தார். கலிலியோ சொற்போர் மன்றத்தில் நடக்கும் சொற்போர்களிலெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/22&oldid=739256" இலிருந்து மீள்விக்கப்பட்டது