பக்கம்:அறிவியற் சோலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அறிவியற் சோலை - = - _ விளங்கிய சோசியலிசக் குடியரசுத் தலைவர்களின் போலி வேடங்களைத் தெரிந்துகொண்டார். உழைப் பாளர் முன் நல்லவர்போல் நடித்து, பின்பு அவர்களது நாசத்திற்கு வழி வகுக்கும் அவர்களது நயவஞ்சகத் தினை, ஏட்டின் மூலமாகவும் சொற்பெருக்காற்றியும் வெளி உலகிற்கு விரிவாய் எடுத்துக் காட்டும் பணியில் இவர் பெரிதும் ஈடுபட்டார். பல நாடு களைப் பார்வையிட்டதன் மூலம் அடைந்த ஆழ்ந்த அனுபவத்துடன், மீண்டும் தன் தாய் நாட்டை நோக்கி ராகோசி 1914-ல் சென்ருர். போரில் இவர் ஆற்றிய தொண்டு இதே நேரத்தில்தான் முதல் உலகப் போ தொடங்கியது. எனவே ராகோசியின் சேவை இதற் குத் தேவை எனத் தெரிந்தோர் இவரைப் பயன் படுத் திக் கொண்டனர். இவர் கிழக்கு எல்லை நோக்கி அனுப்பப்பட்டார். ஆனல் இவர் ரஷ்யாவில் சிறைப் படுத்தப்பட்டு கைதிகள் முகாமிற்கு அனுப்பப்பட்டார் அங்கும் அவர் வாளா இருக்கவில்லை. சிறையிலிருந்து கொண்டே ரஷ்ய மொழியினைப் பயிலத் தொடங்கினர் மேலும் ரஷ்ய சோசியலிச நண்பர்களுடன் நட்பு கொண்டார். அம்மட்டுமா ! அங்குள்ள மக்களை எல்லாம் ஒன்று படுத்தி, தம் கொள்கைகளை யெல்லா அவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்தார். அடிக்கடி கூட்டங்கள் கூட்டியும், சொற்பெருக்காற்றியும் அவ களை அறிவுடையவர்களாக்கினர். கி. பி. 1917-ஆ. ஆண்டு நடந்த போராட்டத்திற்குப் பிறகு, போல்ஸ் விக் மக்களுக்காக ராகோசி துணை நின்று அவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து வரலார்ை. இத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/24&oldid=739258" இலிருந்து மீள்விக்கப்பட்டது