பக்கம்:அறிவியற் சோலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o: உழைப்பாளிகளின் தலைவன் 29 - --- o ஆல்ை என் அருமை நண்பரே ! ஹங்கேரி இனி வெற்றிபெ றும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. காத்திருங்கள் ; காலம் மாறும் ; காண்பீர்கள் வெற்றியை.” என்று கூறி ராகோசியினை உரமூட்டி ர்ை. இவ்வாறு முதல் சந்திப்பிலேயே ராகோசி, லெனின் இருவருக்குமிடையே அகற்ற முடியாத அன்பும், பிரிக்க முடியாத பிணைப்பும் ஏற்பட்டன. லெனின் இறுதியில் ராகோசியைப்பற்றிக் குறிப்பிட்ட தாவது : ' ராகோசியைப் போன்ற வன் மையாளர்கள் தி ணமாக உலக முழுவதும் வெற்றிக் கொடியை நாட்டுவர் என்பது என் எண்ணம் ”. இத்தாலியில் ராகோசி கி. பி. 1921லிருந்து 1925 வரை, ராகோசி ஆறறிய தொண்டு போற்றுதற்குரியதாகும். அகில உலகப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளரில் ஒருவராய் இவர் தொடர்ந்து இந்நான்காண்டுகளும் பதவியில் இருந்தார். இத்தாலி, செக்கோஸ்லோவேகியா, செர் மனி போன்ற இடங்களில் நடந்த மாநாடுகளுக் கெல்லாம் உலக உழைப்பாளிகளின் சங்கப் பிரதிநிதி யாக இவர் அனுப்பப்பட்டார். இத்தாலிய, செர்மானிய நாட்டுப் பொதுவுடமைக் கட்சிகள் ஒன்றுபட்டு இயங்குவதற்கு வழி வகுத்தவர் இவரே. மேலும் பிரான்சு நாட்டுப் பொதுவுடமைக் கட்சிக்கு ஏற்பட்ட இன்னலிலிருந்து அதனை மீட்டவரும் இப்பெரியாரே. கி. பி. 1922ல் புதிய அரசாங்கம் கல்லினும் வலிய சித்த (புடைய முசோலினியின் தலைமையின்கீழ் இத்தாலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/35&oldid=739270" இலிருந்து மீள்விக்கப்பட்டது