பக்கம்:அறிவியற் சோலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ா_ _____ ____ _ 32 அறிவியற் சோலை யால் கூட்டப்பெற்றது. அம்மாநாட்டிற்கு உழைப் பாளிகள் செல்லாதவாறு இருக்க, நாட்டின் காவற் படையின் துணைகொண்டு, நாடெங்கணும் காவலை யும், கட்டுப்பாட்டையும் அரசாங்கத்தார் ஏற்படுத்தினர். எனினும் இக்காவல் கட்டுப்பாட்டினை எல்லாம் கடந்து, பெருவாரியான தொழிலாளர் மாநாட்டிற் கலந்துகொள்ளவே மாநாடு வெற்றியுடன் முடிந்தது. இதனைக் கண்ட அரசியலார் பொதுவுடமைக் கட்சி யினரை, அடக்கி ஒடுக்குவதற்குத் திட்டங்கள் பல தீட்டினர். தீட்டியதோடு அமையாது செயலிலும் இறங்கவே, பொதுவுடமைக் கட்சியினர் அனைவரும் இன்னல் பலவற்றினை அடைந்தனர். மாநாட்டிற்குப் பின்னர் ஹங்கேரி திரும்பி வழக்கம்போல் தன் பணியை மேற்கொண்டிருந்த ராகோசியை, சூழ்ச்சி யினுல் வீழ்ச்சியுறச் செய்தனர். கி. பி. 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 12ல், இவர் பொதுவுடமைத் தலைவர் களில் ஒருவரான சோல்டான்வாஸ் என்பவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்குங்கால், ஹார்த்தி காவல் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இச் சந்திப்பினை ஏற்பாடு செய்தவர் ஒரு காவல் படை அலுவலர் என்பதை, ராகோசி அறியாமற் போன காரணத்தினுல்தான், மாற்ருர் விரித்த வலையிற் I ILL — ПГТ. முதல் விசாரணை சிறைப்படுத்தப்பட்ட ராகோசியினைக் குற்றம் சாட்டி விசாரணைக்குட்படுத்த வேண்டுமா, அல்லது வாளாயிருந்து விடுவதா என்பது குறித்து, நீண்ட தொரு விவாதத்தினை மாற்ருர் நடத்தினர். இறுதியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/36&oldid=739271" இலிருந்து மீள்விக்கப்பட்டது