பக்கம்:அறிவியற் சோலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ o இழைப்பாளிகளின் தலைவன் 33 இவ்வீரரைக் குற்றம் சாட்டி மடக்க வேண்டும் என்று முடிவு கட்டினர். ஆல்ை இது குறித்து பிற நாடுகளி லெல்லாம் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஹங் கேரி நாட்டு அரசாங்கம் செய்த முடிவு தவருண முடி வாகும் என்பதைப், பிற நாடுகள் எல்லாம் எடுத்துக் - காட்டின. கண்ணிலிருந்து கருமனியை நீக்க யார் தான் ஒப்புவர் ? தொழிலாளர் அனைவரும் ஒன்று திரண்டு இம் முடிவினை எதிர்க்க ஆரம்பித்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆல்ை அங்கு யாவரும் உண்ணு நோன்பினை மேற்கொண்டனர். மேலும், காவல் படையினர் செய்யும் கொடுமையினை எடுத்துக் காட்டவே, சிறை செய்யப்பட்டோர் அனை வரும், அரசாங்கச் சட்டவல்லுநரின் பொறுப்பில் விடப்பட்டனர். நவம்பர் 14ஆம் தேதியன்று, ராகோசியும் அவரது ஆருயிர் நண்பர் நால்வரும், புடாபெஸ்ட் நகரிலுள்ள நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். நீதி மன்றத்தார் செய்வதறியாது திகைத்து நின்றனர். அவர்கள் ஒன்று ராகோசி குற்றமுடையவர் அல்லது குற்றவாளி அல்ல என்று, இரண்டிலொன்று கூறித் தான் ஆகவேண்டிய நிலையிலிருந்தனர். குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால், இரண்டு மணி நேரத் தில் குற்றவாளியைத் துாக்கிலிட வேண்டும். குற்ற வாளி அல்லவென்று முடிவு செய்தால் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்களது நிலை இவ்வாறிருக்க, ராகோசியோ, கலங்காது, கண்ணிர் விடாது, பீடு நடை போடும் ஏறு போல், எதற்கும் அஞ்சாது நின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/37&oldid=739272" இலிருந்து மீள்விக்கப்பட்டது