பக்கம்:அறிவியற் சோலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர கோரி நீதி மன்றத்தில் கூறியதாவது . . முதலாளி வர்க்கத்தின іі முறையற்ற தன்மையில் நடக்கின்றனர். எனவே மக்களின் உரிமையினைக் காப்பதற்கு, பொதுவுடமைக் கட்சி வலிமை பெறுதல் வேண்டும். எங்கள் வழியே, நேரிய-சீரிய வழியாகும். என்னைத் தற்காத்துக்கொள்ள நான் எள்ளளவும் விரும்பவில்லை. ஹங்கேரி நாட்டில் பொதுவுடமைக் கட்சி யொன்றினை நிலைநாட்ட முழு மூச்சுடன் நான் முயன்றேன். உழைப்பாளிகள் உயர்வடைய வேண்டு மென்பதே எங்கள் நோக்கம்”. இத்தகைய ஆணித் தரமான இவரது பேச்சைக் கேட்ட மாத்திரத்தில், நீதி மன்றத்தார் உண்மையிலேயே அசந்துவிட்டனர். மேலும் ராகோசி, தான் ஒரு பொதுவுடமைவாதி, அதுவும் லெனினின் மாணவன் என்று சொல்லிக் கொள்வதில் மன நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகக் கூறினர். அவருடைய நண்பர்களும் அவருக்கு அரண் போன்றே விளங்கினர் ; அவருடைய கருத்துக்கு முரண்படவில்லை. எனவே ராகோசிக்கு ஏற்பட்டிருந்த இன்னல் சூரியனைக் கண்ட பணி போன்று மறைந்தது. இவ்வாறு உழைப்பாளிகளின் ஒன்றுபட்ட ஆற்றலி ல்ை, சாவின் பிடியிலிருந்து ராகோசியும் அவரது நண்பர்களும் விடுபட்டனர். கி. பி. 1926ஆம் ஆண்டு சூலை 27ஆம் தேதி மறுபடியும் ராகோசியும் அவரது நண்பர்களும் கேமரா என்ற இடத்தில் உள்ள நீதி மன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர். இருப்பினும் இந்நிகழ்ச்சியானது பழையபடியும் உலகத்தவரின் கவனத்தையெல்லாம் ஒருங்கே ஈர்த்தது. இதுபற்றி ஜோசப் ரேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/38&oldid=739273" இலிருந்து மீள்விக்கப்பட்டது