பக்கம்:அறிவியற் சோலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இந்நூல் மக்களின் அறிவை வளர்ப்பதற்குத் துணைபுரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில், மொழி வரலாறு, உழைப்பாளிகளின் தலைவன், தமிழர் விளையாட்டு, வள்ளல் பாரி, விடுதலை வீரன், இன்றைய சப்பான் ஆகிய இவை இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகளைப் படிப்பதால் நாம் மொழி யறிவு, நாட்டுப் பற்று, உழைப்பின் மேன்மை, விளையாட்டில் விருப்பம் இவற்றை அடையக்கூடும். நெல்லைச் செய்தி, குமரகுருபரன், பாட்டாளி முதலிய இதழ்களில் வெளியான சில கட்டுரைகளும், வெளிவராத சில கட்டுரைகளும், இதில் உள்ளன. இக் கட்டுரைகளை அச் சியற்றுங்கால் எனக்கு உதவியாய் இருந்த திரு. அ. சங்கர வள்ளிநாயகம் பி. ஏ , திரு. அ. காமாட்சி ஆகிய இருவருக்கும், அச்சுப் படிகளைத் திருத்தி உதவிய தியாகராசர் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் திரு. க. ஆறுமுகம் எம். ஏ. அவர்களுக்கும், இந் நூற்குச் சிறப்புரை வழங்கிய பேராசிரியர் அ. கி. பரந்தாமனர் எம். ஏ. அவர்களுக்கும், இந்நூலை அழகுற அமைத்து வெளி யிட்ட திண்டுக்கல் பதிப்பகத்தாருக்கும் எனது நன்றி உரிய தாகுக. -- தியாகராசர் கல்லூரி, அ. திருமலை முத்துசுவாமி மதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/4&oldid=739275" இலிருந்து மீள்விக்கப்பட்டது