பக்கம்:அறிவியற் சோலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ 36 அறிவியற் சோலை தம்பட்டம் அடிப்போர்க்கெல்லாம் ' இது தான் எங்கள் கொள்கை ” என்று பொதுவுடமைக் கட்சியின் கொள்கையினைத் திட்டவட்டமாய் உலகினுக்கு எடுத் துக் காட்டினர். அம்மட்டுமா ! தங்களை எதிர்த்த சோசியலிச வாதிகள், அரச பரம்பரையைச் சேர்ந் தோர், இவர்கள் செய்து வந்த சதிகள், சகிக்க வொண்ணுக் கொடுமைகள், இன்னேரன்னவற்றை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கினர். குற்றம் சாட்டப் பட்ட ராகோசி மாற்ருர் குறைகளை எல்லாம், மருளாது இம் மாநிலத்தோர்க்கு விளக்கிக் கூறி வெற்றியும் கண்டார். ஆனல் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒவ்வொரு உழைப்பாளியையும் திடுக்கிட வைத்தது. ஒருவனது வாழ்வின் போக்கினை முடிவு செய்யு தகுதியினை உடையதன்ருே நீதி மன்றம். ராகோக யைப் போன்ற எத்தனையோ மாவீரர்களுக்கெல்லாட நீதி வழங்கிய இடமன்ருே ? எனவே ராகோசி இந்நீதி மன்றத்திற்குப் புதியவராகக் காட்சித் தரவில்லை. குற்றம் செய்யப்பட்டவன் செல்வத்திலோ அன்றி செல்வாக்கிலோ குறைந்தவனைல் நீதியும் தன் உண்மை நிலையிலிருந்து சில வேளைகளில் பிறழ்ந்து விடுமன்ருே ! பணம் படைத்தோர் பாதகம் செய்ய, ஆனல் அப் பழியானது பாமரர் மீது சுமத்தப்படுவதை அன்ருடம் அறிகிருேமல்லவா! இதற்கு நீதி மன்றமே துணை செய்கின்றது. என்னே அதே போன்றுதான் நாடு நலம் பெற வேண்டும் என்று நாடோறும் உழைத்த ராகோசிக்கு நீதி மன்றம் எட்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. அதோடு விட் டதா ? இல்லை. எங்கே பிறருடன் சேர்ந்துவிட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/40&oldid=739276" இலிருந்து மீள்விக்கப்பட்டது