பக்கம்:அறிவியற் சோலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-0 - அறிவியற் சோலை _________ _ _ - இதனை அறிந்த உழைப்பாளிகள் நாடெங்கும் வெற்றி விழாக் கொண்டாடினர். மாஸ்கோவில் ராகோசி ஏறத்தாழ பதினறு ஆண்டுகள் சிறையில் வாடிய ராகோசி, விடுதலை பெற்றவுடன் மாஸ்கோ வந் தடைந்தார். இதற்கு எட்டு மாதங்களுக்குப் பின்னர் ஹங்கேரி செர்மனியுடன் சேர்ந்து, சோவியத் அரசாங் கத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கியது. கி. பி. 1941-ஆம் ஆண்டு ஜூலை 3ல் ஸ்டாலின் சோவியத் அரசாங்கத்தின் யுத்தக் கொள்கையினை வெளியிட்டார். சோவியத் அரசாங்கம் தங்கள் விடு தலைக்கு மட்டுமல்லாது, செர்மனியின் ஆதிக்கத்தி லிருக்கும் பிற நாடுகளையும் விடுவிக்கப் போராடுகிறது என்று எடுத்துக் கூறினர். ஹங்கேரி ஹிட்லரின் பேச்சிற்குச் செவி சாய்த்ததால், ஹங்கேரி விரர்கள் சோவியத் அரசாங்கத்துற்கு எதிராகவே போராடத் துணிந்தனர். ஆனல் பொதுவுடமை வாதிகளோ சோவியத் அரசாங்கத்திற்கே பக்க பலமாய் விளங் கினர். பெரும் படையொன்றினையும் திரட்டினர். ராகோசி இதுகால் பின்வரும் அறிக்கை யொன் றினை வெளியிட்டார். 'சோவியத் அரசாங்கம் தங்களைச் செர்மன் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வ தற்காக நடத்தும் போர், நமது நாட்டு விடுதலைக்கும் வழி வகுக்கும். ஆதலால் ஹங்கேரி மக்களுக்கும் இப் போராட்டத்தில் தலையாய பொறுப்புண்டு. சோவியத் அரசாங்கம் தன் போராட்டத்தில் வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/44&oldid=739280" இலிருந்து மீள்விக்கப்பட்டது