பக்கம்:அறிவியற் சோலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ --- 48. அறிவியற் சோலை தேர் உருட்டி விளையாடிய அயர்ச்சியில் தாயின் பாலை உண்டு அவள் அணைப்பில் அயர்ந்து துரங்கும். உற் சாகம் ஏற்பட்டபோது சிறுதேர் ; குறைந்த போது தாய்ப்பால் ; இதுதான் தமிழ்ப் பிள்ளைகளின் விளை யாட்டு. முல்லை கிலத்தில் கவின்பெறு காடும் அதனைச் சார்ந்த இடமுமே முல்லை நிலமெனப்படும். இந்நிலத்தில் வாழும் மக்க ளுக்கு ஆடு மாடுகளே ஒப்புயர்வற்ற செல்வங்க ளாகும். காட்டு வெளிகளில் அவைகளை மேய்த்து, அவைதரும் பால், தயிர், நெய் இவற்றை அயலூர் களில் விற்று வாழ்வை வளர்ப்பதே அவர்களது தொழிலாகும். இம்மக்கள் தங்களது வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதனேடு ஒரு காளைக் கன்றை யும் செல்வமாக வளர்ப்பார்கள். பெண்ணும் வளர்மதி போன்று வளர்ந்து, பருவமடைந்து பவளப் பதுமை யாக விளங்கி, பருவமடைந்த ஆயர் கண்களுக்கு விருந்தாவாள். உடன் வளந்த கன்றும், ஒழுங்காக நீண்டு வளர்ந்த கொம்புகளோடும், முதுகின்மேல் பருத்த திமிலோடும், கழுத்தின் கீழே தொங்கும் அலைதாடியோடும் காண்போர் கருத்தைக் கலங்கச் செய்யும் அளவில் கொழுத்து வளர்ந்திருக்கும். ஏறு தழுவுதல் * ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காளையை எதிர்த்து அடக்குபவனுக்கு என் பெண்ணைக் கொடுப்பேன் ' என்று தந்தை பறையறைவான். ஆயர் கூட்டமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/52&oldid=739289" இலிருந்து மீள்விக்கப்பட்டது